திரு.சபா இராஜேந்திரன் (குட்டிமணி அண்ணா) அவர்களினால் நடாத்தப்பட்ட மு.தங்கவேல் ஞாபகார்த்த முதலாவது விருது வழங்கும் நிகழ்வுகள் நேற்று நடைபெற்றது. மறைந்த வல்வை நீண்டகாலத் தலைவர் தங்கப்பா ஞாபகார்த்தமாக ஆண்டுதோறும் விளையாட்டுகளில் திறமையினை நிரூபிக்கும் வல்வை விளையாட்டுக் கழக வீரர் ஒருவருக்கு தங்கவேல் ஞாபகார்த்த விருது வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அந்த வகையில் கடந்த வாரம் நடைபெற்று வந்த தடகள மற்றும் பெரு விளையாட்டுகள் முடிவில் அதிகபுள்ளிகளை பெற்று ஞா.ரசிகரன் தங்கவேல் ஞாபகார்த்த முதலாவது விருதினை பெற்றுள்ளார்.










