மாற்றத்தில் சிதம்பரா கல்லூரி……..

0
573 views

மாற்றத்தில் சிதம்பரா கல்லூரி……

சிதம்பராகல்லூரி பழைய மாணவர் சங்கத்தின் வருடாந்த பொதுக்கூட்டமும் புதிய நிர்வாக சபைத்தெரிவுக் கூட்டமும் 17\02\2019 அன்று பாடசாலை ஆராதனை மண்டபத்தில் இடம்பெற்றது.

கூட்டத்தின்போது வருடாந்தக் கணக்கறிக்கை வாசிக்கப்பட்டதுடன் புதிய ஆண்டிற்கான புதிய நிர்வாக சபையும் தெரிவு செய்யப்பட்டது.

வாக்கெடுப்பில் செயலாளராக செல்வன் ர.திவாகர் (மொறட்டுவபல்கலைகழக பொறியியலாளர் ) தெரிவு செய்யப்பட்டார். உப தலைவராக செல்வன் தெ.நிரோசன் (யாழ்பல்கலைகழகத்தில் Physical Science, Final year) பொதுச்சபையால் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

பல வருடங்களாக இடை நிறுத்தப்பட்டிருந்த க பொத உயர்தர விஞ்ஞானம் முன்னாள் அதிபர் ராஜதுரை அவர்களின் முயற்சியினால் மீண்டும் 2011 இல் ஆரம்பிக்கப்பட்ட போது இந்த இரு மாணவர்களும் வெளியூர் பாடசாலைகளுக்கு செல்லாமல் சிதம்பராவில் உயர்தர கல்வியை தொடர முன்வந்து பல்கலைகழகதிற்கு தெரிவாகி வல்வை மண்ணிற்கு பெருமை சேர்த்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

நிர்வாக சபை உறுப்பினர்கள்:

தலைவர் – சி. சிவனேசன் (Captain)

செயலாளர் – ரா.திவாகர் ( Moratuwa University, Engineer)

பொருளாளர் – சிவஞானம்

உபதலைவர்கள்
நிரோசன் (Jaffna University, Physical Science)
சா.சிறிபதி

உபசெயலாளர் – S .கோணநாயகம்

உறுப்பினர்கள் –
தி. சித்திரவேல்
அ. ரவீந்திரதாஸ்
இ. ஜெயசீலன்
தி. ஞானவேல்
திருமதி சியாமளா பாஸ்கரன்
திருமதி சுரேந்திரநாதன்
கு. சத்தியசீலன்
பொ. சிவஞானசுந்தரம்
S. சிந்துயா
மு. இராமேஸ்வரன்
வினோத்
யோ. கார்த்திகேயன்
உ. லவன்
S. சின்னத்தம்பு

கணக்காய்வாளர் – ஆ. நாகலிங்கம்

போசகர்கள் –
S குருகுலசிங்கம் (அதிபர்)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here