அரையிறுதிக்குள் நுழைந்தன உடுப்பிட்டி நவஜீவன்ஸ், கொற்றாவத்தை றேஞ்சர்ஸ்

0
579 views

ஆதிசக்தியின் கால்ப்பந்தாட்டத் தொடரில் அரையிறுதிக்குள் நுழைந்தன உடுப்பிட்டி நவஜீவன்ஸ் விளையாட்டுக்கழகம் மற்றும் கொற்றாவத்தை றேஞ்சர்ஸ் விளையாட்டுக்கழகம்.

 

 

 

 

 

 

 

 

 

 

ஆதிசக்தி நடத்தும் கால்ப்பந்தாட்ட தொடர் சிதம்பராக் கல்லூரி மைதானத்தில் இடம் பெற்று வருகின்றது.அதில் நேற்று முன்தினம் இடம்பெற்ற முதல் ஆட்டத்தில் இமையாணன் மத்திய விளையாட்டுக்கழகமும் உடுப்பிட்டி நவஜீவன்ஸ் விளையாட்டுக்கழமும் மோதின.இரண்டு அணிகளும் அரையிறுதிக்கு செல்லப்போவது யார் என்ற பலத்த எதிர்பார்ப்புடன் களமிறங்கினர்.இருந்த போதும் அபாரமாக விளையாடிய நவஜீவன்ஸ் அணி 4:0 என் அடிப்படையில் வெற்றி பெற்று அரையிறுதிக்குள் நுழைந்தது.

அடுத்து இடம் பெற்ற ஆட்டத்தில் கொற்றாவத்தை றேஞ்சர்ஸ் அணி பொலிகை பாரதி அணியை 6:0 என்ற கோல்கள் அடிப்படையில் வீழ்த்தி அரையிறுதிக்குள் நுழைந்தது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here