வட கிழக்கு உதைபந்தாட்ட வரலாற்றில் புதிய பரிமாணம்! முதலாவது உதைபந்தாட்ட திருவிழா!

0
1,081 views

 

அனைவராலும் எதிர்பார்க்கப்பட்டு கொண்டு இருக்கும் வடகிழக்கு பிறீமியர் லீக் தொடர் நாளை மறுதினம் இரவு துரையப்பா மைதானத்தில் பிரமாண்டமான முறையில் ஆரம்பமாகவுள்ளது.

வடக்கு கிழக்கு தமிழா் தாயக உதைபந்தாட்ட வரலாற்றில் மற்றுமொரு பரிமாணமாக ஐ.பி.சி தமிழ் மற்றும் லங்காசிறி ஊடக அனுசரணையில் வடக்கு கிழக்கின் முதலாவது உதைபந்தாட்ட திருவிழா இடம்பெறவுள்ளது.

வடக்கு கிழக்கு பிறிமியா் லீக் (north east premier league) எனும் தொனிப்பொருளில் இடம்பெறவுள்ள உதைபந்தாட்டம் எதிா்வரும் 30 ஆம் திகதி புதன்கிழமை யாழ்ப்பாணம் துரையப்பா விளையாட்டரங்கில் மாலை 6 மணிக்கு இடம்பெறவுள்ளது.

குறித்த போட்டியில் மட்டக்களப்பு மாவட்டத்தை பிரதிநிதித்துவபடுத்தும் வகையில் பட்ரி சுப்பா் கிங்கஸ் அணி, திருகோணமலை மாவட்டத்தை பிரதிநிதித்துவபடுத்தும் வகையில் ரிங்கோ ரைய்ரன்ஸ் அணி, கிளிநொச்சி மாவட்டத்தை பிரதிநிதித்துவபடுத்தும் வகையில் கிளியூர் கிங்ஸ் அணிகள், பங்குபற்றுகின்றன.

தொடா்ந்தும் அம்பாறை மாவட்டத்தை பிரதிநிதித்துவபடுத்தும் வகையில் அம்பாறை அவென்ஜோ்ஸ் அணி, மன்னாா் மாவட்டத்தை பிரதிநிதித்துவபடுத்தும் வகையில் மன்னாா் ஏப்.சி மற்றும் மாதோட்டம் ஏப்.சி அணிகள், முல்லைத்தீவு மாவட்டத்தை பிரதிநிதித்துவபடுத்தும் வகையில் முல்லை பீனிக்ஸ் அணி, வவுனியா மாவட்டத்தை பிரதிநிதித்துவபடுத்தும் வகையில் வவுனியா வொரியஸ், ரில்கோ கொன்கியூரஸ் அணிகளும் பங்குபற்றுகின்றன.

அத்துடன் யாழ்ப்பாண மாவட்த்தை பிரதிநிதித்துவபடுத்தும் வகையில் வல்லை ஏப்.சி, நோதா்ன் எலைய்ட் ஏப்.சி, தமிழ் யுனைட்டட் அணிகள் பங்குபற்றுகின்றன.

இந்நிலையில் வெற்றி பெறும் அணிகளுக்கு பெறுமதியான பணப்பரிசில்களும் வழங்கப்படவுள்ளன.

முதலாம் பரிசாக 50 இலட்சம் ரூபாவும், இரண்டாம் பரிசாக 30 இலட்சம் ரூபாவும், மூன்றாம் பரிசாக 15 இலட்சம் ரூபாவும், நான்காம் பரிசாக 5 இலட்சம் ரூபாவும் வழங்கப்படவுள்ளன.

இந்த பிறிமியா் லீக் உதைபந்தாட்ட போட்டியானது வடக்கு கிழக்கு தமிழா் தாயக பகுதியில் உள்ள உதைபந்தாட்ட அணிகளுக்கு கிடைத்த ஒரு வரப்பிரசாதமாக அமைகின்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here