வல்வை வருத்தப்படாத வாலிபர் சங்க கிண்ணத்தை தனதாக்கியது இளங்கதிர் அணி

0
796 views

வல்வை வருத்தப்படாத வாலிபர் சங்கம் தொடர்ச்சியாக நான்காவது வருடமாக நடாத்தும் வல்வைக்குட்பட்ட கழகங்களிடையே அணிக்கு 7 நபர் கொண்ட உதைபந்தாட்டப்போட்டியை நடாத்தி வந்தது.

(07/05/2018)  நடைபெற்ற இறுதிப்போட்டியில் இளங்கதிர் அணியை எதிர்த்து சைனிங்ஸ் அணியானது மோதியது.  இதற்கு முன்னதாக இடம்பெற்ற மூன்று தொடர்களிற்கும் இளங்கதிர் அணி இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்ற போதும் தோல்வியையே தழுவிக்கொண்டது.

அது மட்டுமல்லாமல் தீருவில் மைதானத்தில் கிட்டத்தட்ட 7 வருடமாக பல இறுதிப்போட்டிகளில் மோதினாலும் தோல்வியை தழுவி இரண்டாம் இடத்தையே பெற்றுக்கொண்டது.
அனைத்துக்கும் முற்றுப்புள்ளி வைக்கும் முகமாக இவ் இறுதியாட்டத்தில் ஆரம்பம் முதல் இறுதி வரை மிகச்சிறப்பாக விளையாடி 4-2 என்ற கோல்கணக்கில் வெற்றி பெற்று கிண்ணத்தை தனதாக்கியது.
இச்சுற்றுத்தொடரின் சிறந்த கோல்காப்பாளராக சைனிங்ஸ் அணியைச்சேர்ந்த விஜேயந்திரன் ஆட்டநாயகனாக இளங்கதிர் அணியைச்சேர்ந்த மதுசாந் தொடராட்ட நாயகனாக அதே அணியைச்சேர்ந்த பிரசாந் சிறந்த பின்கள வீரராக அணியைச்சேர்ந்த ஜெகனும் தெரிவு செய்யப்பட்டனர் .
வெற்றி பெற்ற இளங்கதிர் அணிக்கு 20000 ரூபா கணப்பரிசிலும் வெற்றிக்கிண்ணமும், இரண்டாம் இடத்தைப்பெற்ற சைனிங்ஸ் அணிக்கு 15000 ரூபா பணப்பரிசிலும் வெற்றிக்கிண்ணமும், மூன்றாம் இடத்தைப்பெற்ற ரேவடி அணிக்கு 5000 ரூபா பணப்பரிசிலும் வெற்றிக்கிண்ணமும் வழங்கி கௌரவிக்கப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here