கபாலி படம் 6 நாட்களில் ரூ.320 கோடி வசூலித்து சரித்திர சாதனை படைத்துள்ளது. இதுகுறித்த செய்தியை கீழே பார்ப்போம்..
கடந்த வாரம் வெளிவந்து திரையரங்குகளில் வெற்றிநடை போட்டு வரும் படம் ‘கபாலி’. ரஜினி நடிப்பில் உருவாகியிருந்த இப்படத்தை பா.ரஞ்சித் இயக்கியிருந்தார். கலைப்புலி எஸ்.தாணு பிரம்மாண்டமாக தயாரித்திருந்தார். இப்படத்தின் புரோமோஷன்கள் இதுவரை எந்த தமிழ் படத்துக்கும் இல்லாத அளவுக்கு பிரம்மாண்டமாக செய்யப்பட்டிருந்தது.
‘கபாலி’ வெளியாகி ஒருவாரம் கடந்த நிலையில்இ வசூலில் மிகப்பெரிய சாதனையை படைத்துள்ளதாக கூறப்பட்டது. எனினும்இ அதிகாரப்பூர்வமான வசூல் நிலவரங்கள் எதுவும் படக்குழு தரப்பிலிருந்து வெளிவரவில்லை. இந்நிலையில்இ நேற்று சென்னையில் நடந்த ‘கபாலி’ வெற்றி விழாவில் அப்படம் உலகம் முழுவதிலும் ரூ.320 கோடி வரை வசூலித்ததாக அறிவிக்கப்பட்டது.
தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு பேசும்போதுஇ சென்னையில் மட்டும் 6 நாட்களில் ரூ.6 கோடி வரை வசூல் செய்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார். மேலும்இ ‘கபாலி’ வெற்றிக்காக பணியாற்றிய அனைவருக்கும் நன்றிகளையும் தெரிவித்தார்.
ஒரு வாரத்திற்குள் இதுவரை எந்தவொரு இந்திய சினிமாவும் இவ்வளவு வசூலை எட்டவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இது ஒரு மிகப்பெரிய சரித்திர சாதனையாகவும் கருதப்படுகிறது. இந்த ‘கபாலி’ வெற்றி விழாவில்இ இயக்குனர் பா.ரஞ்சித்இ நடிகர்கள் ஜான் விஜய்இ கலையரசன்இ தினேஷ்இ மைம் கோபிஇ பாடகி ஸ்வேதா மோகன்இ பாடகர் அருண்ராஜா காமராஜ்இ நடிகை ரித்விகாஇ கலை இயக்குனர் ராமலிங்கம்இ இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன்இ எடிட்டர் பிரவீன் கே.எல்.உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்









