இலங்கை உதைபந்தாட்டச் சம்மேளனம் நடத்தும் எவ்.ஏ கிண்ணத்துக்கான உதைபந்தாட்டச் சுற்றுப்போட்டியின் பருத்தித்துறை உதைபந்தாட்ட லீக்கில் பதிவு செய்த அணிகளுக்கிடையிலான ஆட்டங்கள் நெற்கொழு கழுகுகள் விளையாட்டுக் கழகம் மற்றும் அல்வாய் நண்பர்கள் விளையாட்டுக்கழகம் ஆகிய மைதானங்களில் இடம்பெற்று வருகின்றன.
அதில் நாளை சனிக்கிழமை அல்வாய் நண்பர்கள் விளையாட்டுக்கழக மைதானத்தில் முற்பகல் 9மணிக்கு இடம்பெறும் முதலாவது ஆட்டத்தில் திக்கம் இளைஞர் விளையாட்டுக்கழகத்தை எதிர்த்து வத்தராயன் உதயசூரியன் விளையாட்டுக் கழகமும் முற்பகல் 10மணிக்கு இடம்பெறும் இரண்டாவது ஆட்டத்தில் மணற்காடு சென்அன்ரனீஸ் விளையாட்டுக்கழகத்தை எதிர்த்து பொலிகை பாரதி விளையாட்டுக் கழகமும் பிற்பகல் 3 மணிக்கு இடம்பெறும் ஆட்டத்தில்கட்டைக்காடு சென்மேரிஸ் விளையாட்டுக் கழகத்தை எதிர்த்து வல்வை விளையாட்டுக்கழகமும்4மணிக்கு இடம்பெறும் மற்றொரு ஆட்டத்தில்சக்கோட்டை சென்தோமஸ் விளையாட்டுக் கழகத்தை எதிர்த்து பலாலி விண்மீன் விளையாட்டுக் கழகமும் மோதவுள்ளன







