மாற்றுத்திறனாளிகளுக்கான செயற்கை உறுப்பு தொழில்நுட்ப நிறுவனம் ஒன்று நேற்று முல்லைத்தீவு மாவட்ட புதுக்குடியிருப்பு கைவேலிப் பகுதியில் திறந்து வைக்கப்பட்டது.இந்நிறுவனத்தின் செயலாளரும் முல்லைத்தீவு வலய உடற்கல்விப்பணிப்பாளருமான மைக்கல் திலகராஜா தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் வன்னி மாவட்ட தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலானந்தன் அலுவலகத்தின் பெயர்ப்பலகையைத் திரைநீக்கம் செய்து வைத்தார்.
இந்நிகழ்வில் வடமாகாண சபை பிரதி அவைத் தலைவர் அன்ரனி ஜெகநாதன் வடமாகாண சபை உறுப்பினர் எம்.N.சிவாஜிலிங்கம் மற்றும் மாற்றுத் திறனாளிகள் தொழில்நுட்டப நிறுவன நிர்வாக இயக்குனர் எஸ். ஆன்ரனி உட்பட் மாற்றுத்திறனாளிகள் பொதுமக்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.முhற்றுத் திறனாளிகளின் பிள்ளைகளுக்கு இதில் வைத்து கற்றல் உபகரணங்களும் வழங்கப்பட்டன