நாடாளுமன்ற உறுப்பினருமான அமரர முருகேசு சிவசிதம்பரத்தின் உருவச்சிலை திறந்து வைப்பு

0
663 views

நெல்லியடிப் பஸ்தரிப்படத்திற்கு முன்பாக சுமார் 13 லடசம் ரூபா செலவில் அமைக்கப்பட்ட தமிழ்த்தேசியத் தலைவரும் உடுப்பிட்டி –நல்லூர்த் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினருமான அமரர் முருகேசு சிவசிதம்பரத்தின் உருவச்சிலை எதிர்வரும் ஞாயிற்றுக்கழமை வடமாகாண முதலமைச்சரினால் திறந்து வைக்கப்படவுள்ளது.
கரவெட்டி ஒன்றியத் தலைவர் உபாலி பொன்னமபலம் தலைமையில் காலை 8.30 மணிக்கு இடம்பெறும் இந்த உருவச்சிலையை வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் சம்பிரதாய பூர்வமாக திறந்து வைப்பார்.கனடாவில் புலம்பெயர்ந்து வாழும் அமரர் சிவசிதம்பரத்தின் நண்பரகளால் சுமார்6 லட்சம் ரூபா செலவில் இந்த உரவச்சிலையை ஓவியர் ரமணி வடிவமைத்துள்ளார்.உருவச்சிலைக்கான பீடம் வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே சிவாஜிலிங்கத்தின் மாகாண ஒதுக்கீட்டு நிதியான 7 இட்சம் ரூபா செலவில் அமைக்கப்பட்டுள்ளது.காலை இடம்பெறும் திறப்பு விழாவை அடுத்து தொடர்ந்து நினைவுரைக் கூட்டம் கரவெட்டி தஞ்சை ஜங்கரன் சனசமூக நிலைய மண்டபத்தில் இடம்பெறும் நினைவுரையை யாழ் பல்கலைக்கழப் போராசிரியர் சி. சிவலிங்கராசா நிகழ்த்துவார்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here