வல்வெட்டித்துறை உதயசூரியன் கழகத்தைச் சேர்ந்த தற்பொழுது கனடாவில் வசிக்கும் திரு.திருமதி.திவாகர் யனுசிகா தம்பதிகளின் புதல்விகளான செல்வி.கார்த்திகா மற்றும் செல்வி.அகல்யா ஆகியோரின் பிறந்த நாளை முன்னிட்டு முல்லைத்தீவு மாவட்டத்திற்கு உட்பட்ட மு/கருவேலங்கண்டல் அ.த.க.பாடசாலைக்கு ஐம்பதினாயிரம் ரூபாய் (ரூ.50000.00) பெறுமதியான பாடசாலைக்கு தேவையான கற்றல் உபகரணங்கள் 28.08.2024 அன்று வழங்கப்பட்டது. அத்துடன் மாணவர்களுக்கு வல்வெட்டித்துறையின் பாரம்பரிய உணவான புண்ணாக்கும் வழங்கப்பட்டது.











