சமையல் எரிவாயு, பாலமா, கோதுமை மா விலை உயர்வை அடுத்து அதனை சார்ந்திருக்கும் ஏனைய பேக்கரி உற்பத்திகளின் விலைகள் மீண்டும் உயர்ந்துள்ளன.
அதன்படி தேநீர் விலை 30 ரூபாவாகவும், பால் தேநீர் விலை 70 ரூபாவாகவும் அதிகரிக்கப்பட்டுள்ளன.
பனிஸ் விலை 50 ரூபா என்றும், முட்டை ரோல்ஸ் 65 ரூபாவாகவும் விலை உயர்ந்துள்ளது.
அதேவேளை, மரக்கறி சாப்பாடு ஒன்றின் விலை 160 ரூபாவாகவும், மீன் சாப்பாடு விலை 180 ரூபாவாகவும், கோழி இறைச்சி சாப்பாடு விலை 240 ரூபாவாகவும் அதிகரித்துள்ளன.
இந்நிலையில் பிரைட் ரைஸ் விலையும் 200 ரூபாவுக்கு மேல் அதிகரிக்கப்பட்டுள்ளதாக அறியமுடிகிறது.
வல்வெட்டித்துறையில் பாண் ஒரு இறாத்தல் ரூபா70 இலிருந்து 75 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ள வேளையில் பணிஸ் விலை அதே விலையில் உள்ளது. ஊரி்ல் மரக்கறி சாப்பாடு விலை 180 ரூபாயாகவும் பிரைட் ரைஸ் விலை 300 ஆகவும் அதிகரித்துள்ளது.










