வல்வெட்டித்துறை பகுதியில் கடை உடைக்கப்பட்டு சுமார் 2 லட்சம் பெறுமதியான பொருட்கள் களவாடப்பட்டுள்ளதாக வல்வெட்டித்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. இச்சம்பவம் நேற்று திங்கட்கிழமை வல்வெட்டித்துறை இலந்தைக்காடுப் பகுதியில் நடைபெற்றுள்ளது.
வீடோடுள்ள கடையின் கூரை சீற்றை கழற்றி கடைக்குள் நுழைந்தவர்கள் தொலைபேசி மீள் நிரப்பும் அட்டை (கிட் காட்), பால்மா வகை மற்றும் பல்வேறு பொருட்கள் களவாடப்பட்டுள்ளதாக வல்வெட்டித்துறை பொலீஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பாக வல்வெட்டித்துறை பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நேற்று நாடெங்கும் கனமழை பெய்ததுடன், பூரண கடையடைப்பும் இடம்பெற்றுள்ளது. இதனை தமக்கு சாதகமாக பயன்படுத்தியே இத்திருட்டுச் சம்பவம் நடைபெற்றிருக்கக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.








