வல்வையைச் சேர்ந்த ஜிவிந்தன் இலங்கைக் கபடிச் சங்கத்தால் நடத்திய தேசிய நடுவர்களுக்கான பரீட்சையில் B தரச் சித்தியைப் பெற்றுள்ளார்.
யாழ் மாவட்ட வடமராட்சி கபடிச்சங்கத்தைச் சேர்ந்த 8 நடுவர்கள் தேசிய தொழில்நுட்ப அலுவலர்களாகவும் தேசிய நடுவர்களாகவும் பதவி உயர்த்தப்பட்டுள்ளனர். அண்மையில் கொழும்பில் இலங்கை கபடிச் சம்மேளத்தினால் நடத்தப்பட்ட எழுத்து மற்றும் செய்முறைப் பரீட்சைகளின் அடிப்படையில் இது வழங்கப்பட்டுள்ளது.
இதில் யாழ்மாவட்ட கபடிச்சங்கத்தலைவர் பா.முகுந்தன் கபடிச் சம்மேளனத்தின் தேசிய தொழில்நுட்ப அலுவலராக உயர்வு பெற்றதுடன் எ.முரளிதரன், ஜி.முகுந்தன், எம்.பிறேம்குமார் ஆகிய மூவரும் A தர நடுவர்களாகவும் வை.லக்கி, எஸ்.சுதர்சன், எஸ் .ஜிவிந்தன் மற்றும் பி.கலாபன் ஆகியோர் B தர நடுவர்களாகவும் உயர்வு பெற்றுள்ளனர்.









