தீபாவளி பண்டிகை கொண்டாடும் மக்கள், தீப்பற்றக்கூடிய கை கழுவும் திரவங்களை பயன்படுத்திவிட்டு, விளக்குகளை ஒளிரச் செய்வதை தவிர்த்துக்கொள்ளுமாறு சுகாதார அமைச்சு கோரிக்கை விடுத்துள்ளது.
நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று, பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ள நிலையில், பெரும்பாலானோர் அற்ககோல் அடங்கிய கை கழுவும் திரவத்தை அதிகம் பயன்படுத்தும் சந்தர்ப்பங்கள் அதிகரித்துள்ளன. இந்நிலையில், தீபாவளி பண்டிகையை கொண்டாட உள்ளவர்கள், பட்டாசு, மத்தாப்பு போன்ற பல்வேறு விதமான வெடி வகைகளை பயன்படுத்தும் சந்தர்ப்பம் உள்ளமையினால் தீப்பற்றக்கூடிய அபாயம் காணப்படுகின்றது.
ஆகவேதான், உடனே தீப்பற்றக்கூடிய அற்ககோல் அடங்கிய கை கழுவும் திரவங்களை பயன்படுத்திவிட்டு, ஒளி விளக்குகளை ஒளிரச்செய்வதை தவிர்க்க வேண்டும் என சுகாதார அமைச்சு மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.







