புங்குடுதீவு கொரோனா தொற்றுக்குள்ளான பெண் பயணித்த பஸ் விபரம்; பயணித்தோரை தொடர்புகொள்ள அவசர கோரிக்கை
கொரோனா வைரஸ் தொற்று உறுதியான மினுவாங்கொட ஆடைத் தொழிற்சாலையில் பணிபுரியும் புங்குடுதீவைச் சேர்ந்த பெண் நேற்று முன்தினம் யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்து வீடு திரும்பிய பயண ஒழுங்குகளை வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் வெளியிட்டுள்ளார்.
கொழும்பு புறக்கோட்டையிலிருந்து யாழ்ப்பாணத்துக்கு சனிக்கிழமை இரவு 8.30 மணிக்கு Ran Silu – WP ND 6500 என்ற பேருந்தில் பயணித்துள்ளார்.
கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணிக்கையில் அவர் பயணித்த பஸ் வண்டி 04.10.2020 மு.ப 12.30 புத்தளம் பகுதியில் பஸ் பழுதடைந்ததால் கொழும்பு பருத்தித்துறை இ.போ.ச பஸ்ஸில் இலக்கம் ND 9776 இலக்க பஸ் மூலம் பயணித்து கொடிகாமத்தில் காலை 4.30 இறங்கி பின் யாழ்ப்பாணம் பஸ்ஸில் பயணித்துள்ளார்.
இந்நிலையில் கொழும்பு பருத்தித்துறை பஸ்ஸில் பணியாற்றிய நடத்துனர், ஓட்டுனர் இனங்காணப்பட்டு பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.
யாழ்ப்பாணம் பேருந்து நிலையத்திலிருந்து NP ND 8790 இலக்கமுடைய Matha என்ற பேருந்தில் அதிகாலை 5 மணிக்கு புறப்பட்டு புங்குடுதீவை காலை 7 மணிக்குச் சென்றடைந்துள்ளார்.
இந்தப் பெண் பயணம் செய்த பேருந்தில் பயணம் செய்தவர்கள் சமூக அக்கறை கொண்டு சுகாதாரத் துறையுடன் உடனடியாகத் தொடர்புகொள்ளுமாறு அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
எனவே வடமாகாண சுகாதார திணைக்களத்தின் 021 222 6666 என்ற தொலைபேசியுடன் தொடர்பு கொள்ளுமாறு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் கேட்டுள்ளார்.
சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஆ. கேதீஸ்வரன்.








