கரப்பந்தாட்ட சுற்றுப்போட்டியில் வல்வை அணி வெற்றி

0
1,301 views

யாழ்மாவட்ட கரப்பந்தாட்ட சங்கத்தினால் நடாத்தப்படும் லீக் முறையிலான கரப்பந்தாட்ட சுற்றுப்போட்டியில் வல்வை அணி வெற்றி.

மேற்படி ஆட்டமானது புத்தூர் கலைமதி மைதானத்தில் 10/09/2020 அன்று இடம்பெற்றது. அச்சுவேலி யுத் அணியினை எதிர்கொண்டு வல்வை அணி மோதியது.
முதற்சுற்றில் அச்சுவேலி யுத் அணியானது 25:18 என்ற புள்ளிகள் அடிப்படையில் வெற்றி பெற்றது. பின்னர், சுதாகரித்த வல்வை அணியானது இரண்டாவது செற்றினை 25:18 என்ற புள்ளிகள் அடிப்படையில் வெற்றி பெற்றது.. வெற்றியாளரை தீர்மானிக்கும் மூன்றாவது செற்றில் பலத்த போராட்டத்திற்கு மத்தியில் 27:25 என்ற புள்ளிகள் அடிப்படையில் வல்வை அணியானது வெற்றிபெற்றது.
முடிவில் 2:1 என்ற நேர் செற்கணக்கில் வல்வை அணியானது வெற்றியினை தனதாக்கியது…

இதற்கு முன்னைய ஆட்டத்தில் சுழிபுரம் வழங்கம்பரை அம்பாள் அணியானது வருகை தராத காரணத்திலால் வல்வை அணிக்கு வெற்றி வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது..

வாழ்த்துக்கள் வீரர்களே!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here