பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையின் துரித அபிவிருத்திக்காக வடமராட்சி கால்ப்பந்தாட்டச் சங்கத்தால் ஒருலட்சம் ரூபா அன்பளிப்பாக வழங்கப்பட்டுள்ளது.
பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையின் துரித அபிவிருத்திக்கான நிதி சேகரிப்பதற்கான நன்கொடையாளர் தின நிகழ்வு நேற்று மந்திகை ஆதார வைத்தியசாலையின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
வைத்தியசாலையின் அத்தியட்சகர் வே.கமலநாதன் தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில் வடமராட்சி கால்ப்பந்தாட்டச் சங்கத்தின் நிறைவேற்றுக்குழுத் தலைவர் ரி.வரதராசனால் அன்பளிப்பு நிதி வழங்கப்பட்டது. அத்துடன் அன்பளிப்பு வழங்கியமைக்கான நினைவுப்பரிசினை வடமாகாண சுகாதாரப்பணிப்பாளர் வைத்தியர் கே.கேதீஸ்வரன் தலைவரிடம் வழங்கிக் கௌரவித்தார்.











