பருத்தித்துறை மந்திகைப்பகுதியில் இராணுவத்தினர் மேற்கொண்ட துப்பாக்கி பிரயோகத்தில் இளைஞர் ஒருவர் படுகாயமடைந்தார்.

நேற்று முன்தினம் இரவு ஊரடங்கு வேளையில் மந்திகைச் சந்தியில் இடம்பெற்ற இச்சூட்டுச் சம்பவத்தில மாவடிபுலோலி மத்தியைச் சேர்ந்த பசுபதி தனுசன் (வயது 23) என்ற இளைஞனே படுகாயமடைந்தவர் ஆவார்.
ஊரடங்கு வேளையில் மோட்டார் சைக்கிளில் சென்ற குறித்த இளைஞனை மந்திகைச்சந்தியில் பாதுகாப்புக்கடமையில் ஈடுபட்டிருந்த படையினர் மோட்டார் சைக்கிளை நிறுத்தியபோது அதனை மீறிச்சென்ற போதே இளைஞன் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படுகின்றது.
துப்பாக்கி சூட்டில் படுகாயமடைந்த இளைஞன் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.







