வல்வை விக்னேஸ்வரா பாலர் பாடசாலையின் வருடாந்த விளையாட்டுப்போட்டி கடந்த 13.11.2019 புதன்கிழமை அன்று பி.ப 3.00 மணியளவில் வல்வை உதயசூரியன் உல்லாசக் கடற்கரையில் நடைபெற்றது.
வல்வை விக்னேஸ்வரா சனசமூக சேவா நிலைய தலைவர் திரு.சி.மோ.சிவமயம் அவர்களின் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் திரு.சிதம்பரப்பிள்ளை தில்லைநாதன் (முன்பள்ளி உதவிக் கல்விப் பணிப்பாளர், வடமராட்சி வலயம்) அவர்களும் சிறப்பு விருந்தினர்களாக திரு.க.தேவசிகாமணி ( விளையாட்டு ஆலோசகர், பயிற்றுநர்), திரு குணபாலசுந்தரம் ரமணன் (கிராம உத்தியோகத்தர், வல்வை வடமத்தி), திரு.செ.நவரத்தினம் (மூத்த குடிமகன், நிலைய ஆரம்பகால உறுப்பினர்) ஆகியோரும் கலந்து சிறப்பித்தனர்.
சிறுவர்களின் பாண்ட வாத்திய அணிவகுப்புடன் விருந்தினர்கள் அழைத்து வரப்பட்டு மங்கள விளக்கேற்றல் நிகழ்வு கொடியேற்றல் வைபவம் என்பவற்றைத் தொடர்ந்து இறைவணக்கத்துடன் விளையாட்டு நிகழ்வுகள் ஆரம்பமாகின.














































































