இலங்கைக்கு வருகை தரும் இந்திய சுற்றுலாப் பயணிகளின் தொகை அதிகரித்துள்ளதாக இலங்கைக்கான இந்திய உயர்ஸ்த்தானிகராலயம் தெரிவித்துள்ளது.
இதன்படி, வருடத்தின் முதல் மாதங்களை காட்டிலும் கடந்த இரண்டு மாதங்களில் இந்திய சுற்றுலாப் பயணிகளின் வருகை 2 மடங்காக அதிகரித்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஏப்பிரல் 21 தாக்குதலை அடுத்து இலங்கைக்கு வரும் வெளிநாட்டவர்களின் தொகையை அதிகரிப்பதற்கு இலங்கை அரசாங்கம் பல முயற்சிகளை முன்னெடுத்து வருகின்றது. அந்த வகையில் குறிப்பிட்ட சில நாடுகளுக்கு ஜனவரி மாதம் முதல் இலவச விசா வழங்கப்பட்டிருந்தது. இவ்வாறான செயற்பாடுகளால் சுற்றுலாப்பயணிகளின் வருகை அதிகரித்த வண்ணம் உள்ளது.
மேலும், இந்திய சுற்றுலாப்பிரயாணிகளை ஈர்க்கும் வகையில் தற்போது பலாலி விமான நிலைய நிர்மாணப்பணிகள் மேற்கொள்ளப்படுகிறமை குறிப்பிடத்தக்கது.
ஒக்டோபர் மாதம் 16 ஆம் திகதி பலாலி சர்வதேச விமானநிலையம் செயற்படத் தொடங்கும் எனவும் இதன்படி யாழ்ப்பாணத்திலிருந்து இந்தியாவுக்கு விமானசேவைகள் தொடங்கப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது. .பலாலியிலிருந்து கொச்சின்,மும்பை மற்றும் புதுடெல்லி ஆகிய நகரங்களுக்கு விமாசேவை நடத்தப்படும்.45 மீட்டர் அகலத்துடன் 2300 மீட்டர் ஓடுபாதையை இந்த விமான நிலையம் கொண்டுள்ளது







