அகில இலங்கை ரீதியாக அனைத்து பல்கலைக்கழகங்களுக்கு இடையில் நடாத்தப்பட்ட விளையாட்டு விழாவில் பளுதூக்குதலில் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் இருந்து பங்குபற்றிய எமது வல்வை விளையாட்டுக் கழக வீராங்கனை செல்வி இ.தசாந்தினி அவர்கள் முதலாம் இடத்தினை பெற்று தங்கப்பதக்கத்தை சுவீகரித்துள்ளார்.
பளுதூக்குதலில் தொடர்ச்சியான சாதனைகளை நிலை நாட்டி வரும் அவரின் வெற்றிப்பயணம் தொடர வாழ்த்துகின்றோம்.










