வல்வை பிரித்தானியா நலன்புரிச் சங்கத்தின் வாழ்வாதார கொடுப்பனவு

0
616 views

வல்வை பிரித்தானியா நலன்புரிச் சங்கத்தின் பல செயற்பாடுகளில் ஒன்றான வாழ்வாதார கொடுப்பனவு நேற்று வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

விநாயகபுரம் கிளிநொச்சியில் வசிக்கும் குமாரவடிவேல் செல்வகலா அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எமது ஊருக்காக பன்னிரண்டு வருடங்கள் சேவையாற்றியுள்ளார். தற்பொழுது வறுமைக்கோட்டின் கீழ் வாழ்ந்து வருவதாலும் இவரின் மகளின் கல்வி வளர்ச்சியை மேலும் மேம்படுத்துவதற்காகவும் வறுமைக் கோட்டின் கீழ் இருந்து மீண்டு வருமானத்தைப் பெறுவதற்காக ஒரு லட்சத்தி பத்தாயிரம் ரூபா பெறுமதியான 12லீற்றர் பால் கறக்க கூடிய பசுவும் கன்றும் இன்று வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

வல்வெட்டித்துறை வல்வை மக்களின் பிரித்தானியா நலன்புரிச் சங்கம் முழுமையான ஏற்பாடுகளை செய்திருந்தது, அதனை வல்வெட்டித்துறை இளைஞர்கள் வழங்கி வைத்து கௌரவித்தார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here