தொடர்ந்து மூன்றாவது முறையாகவும் சம்பியன்களாகியது உதயசூரியன் மகளீர் அணி….

0
758 views

தொடர்ந்து மூன்றாவது முறையாகவும் சம்பியன்களாகியது உதயசூரியன் மகளீர் அணி….

வல்வை றெயின்போ விளையாட்டுக் கழகம் தமது 76வது ஆண்டு நிறைவினையும், புதிதாக கட்டப்பட்ட மைதான கட்டிட திறப்பு விழாவினை யும் முன்னிட்டு நடாத்திய போட்டிகளின் இறுதிப் போட்டிகள் நேற்று மாலை றெயின்போ மைதானத்தில் நடைபெற்றது.

இதில் வலைப்பந்தாட்டத்தில் உதயசூரியன் பெண்கள் அணி இறுதிப்போட்டியில் பங்கேற்றிருந்தனர். சைனிங்ஸ் அணியுடன் நடைபெற்ற குறித்த இறுதிப் போட்டியில் உதயசூரியன் அணி 10:06 என்ற புள்ளிகள் அடிப்படையில் வெற்றி பெற்று கிண்ணத்தினை சுவீகரித்துள்ளார்கள்.

சுற்றுத்தொடரின் நாயகியாக உதயசூரியன் வீராங்கனை செல்வி தமிழினியும், இறுதிப்போட்டியின் நாயகியாக உதயசூரியன் கழக வீராங்கனை செல்வி உ.தனுசாவும் தெரிவுசெய்யப்பட்டார்கள்.

வல்வைக்குட்பட்ட கழகங்களுக்கிடையில் நடாத்தப்பட்ட வலைப்பந்தாட்ட சுற்றுத் தொடர்களில், அடுத்தடுத்து மூன்று தொடர்களில் உதயசூரியன் மகளீர் அணி சம்பியன்களாகியுளமை குறிப்பிடத்தக்கது.

வெற்றி பெற்ற சகோதரிகளுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டு, அடுத்து வரும் தொடர்களிலும் உங்கள் சாதனைப்பயணம் தொடரவும் வாழ்த்துக்கள்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here