எமது உதயசூரியன் கழகத்தின் மூத்த உறுப்பினர் திரு ஆனந்தசிகாமணி (வெள்ளைக்குட்டி அண்ணா) அவர்கள், உதயசூரியன் கழக மகளீர் அணியினரின் சமீபத்திய சிறப்பான செயற்பாடுகளை பாராட்டி, அவர்களை ஊக்கிவிக்கும் முகமாக 10 சோடி சப்பாத்துகள், ஓரு கூடைப்பந்தாட்டத்துக்குரிய பந்து மற்றும் கூடைப்பந்தாட்ட வலை ஒரு சோடி அன்பனவற்றை அன்பளிப்புச் செய்துள்ளார்.
இறுதியாக வல்வெட்டித்துறை வருத்தப்படாத வாலிபர் சங்கம் நடாத்திய பெண்களுக்கான கூடைப்பந்தாட்டப் போட்டியில், எமது கழக வீராங்கனைகள் நேதாஜி அணியினை வீழ்த்தி சம்பியன்களாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
அடுத்து உதயசூரியன் கழகத்தின் தலைவர் திரு மு.ஜெயதரன் (மனோக்குட்டி அண்ணா) அவர்கள் வளர்ந்து வரும் வீரர் செல்வன் ந.நவீனின் சிறப்பான செயற்பாடுகளை பாராட்டி, அவரை ஊக்கிவிக்கும் முகமாக பூட்ஸ் அன்பளிப்புச் செய்துள்ளார்.
இறுதியாக வல்வெட்டித்துறை வருத்தப்படாத வாலிபர் சங்கம் நடாத்திய உதைபந்தாட்டப் போட்டியில், நவீனுக்கு வளர்ந்து வீரர் விருது வழங்கியமை குறிப்பிடத்தக்கது.
விளையாட்டு வீரர்களை ஊக்குவிக்கும் அவர்களது பணிகள் தொடர வாழ்த்துகின்றோம்.











