சம்பியனாகியது தொண்டைமனாறு வீரகத்திப்பிள்ளை ம.

0
736 views

வடமராட்சி வலயப் பாடசாலைகளுக்கிடையிலான கரப்பந்தாட்டத்தில் 20 வயதுப்பிரிவில் சம்பியனாகியது தொண்டைமனாறு வீரகத்திப்பிள்ளை மகா வித்தியாலய அணி.


வடமராட்சி வலயப் பாடசாலைகளுக்கிடையிலான கரப்பந்தாட்டச்சுற்றுப்போட்டியின் இறுதியாட்டங்கள் நேற்று முன்தினம் கரவெட்டி விக்னேஸ்வராக் கல்லூரி மைதானத்தில் இடம்பெற்றது. இவ்விறுதியாட்டத்தில் தொண்டைமனாறு வீரகத்திப்பிள்ளை மகா வித்தியாலயமும் உடுப்பிட்டி அ. மி கல்லூரியும் மோதின. மூன்று செற் கொண்ட இச்சுற்றுப்போட்டியில் முதல் செற்றை 25:21 என்ற புள்ளிகள் அடிப்படையிலும் இரண்டாவது செற்றை 25:17 என்ற புள்ளிகள் அடிப்படையிலும் தொண்டைமனாறு வீ.ம.வி வெற்றி. 2:0 என்ற நேர் செற்றில் வென்று சம்பியனாகியது.மூன்றாமிடத்தை கரவெட்டி விக்னேஸ்வராக்கல்லூரி பெற்றது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here