கண்ணீர் அஞ்சலி – அமரர் சரவணப்பெருமாள் பாலசேகர்

0
986 views

கண்ணீர் அஞ்சலி – அமரர் சரவணப்பெருமாள் பாலசேகர்


வல்வெட்டித்துறை மண்ணில்
சரவணப்பெருமாள் என்னும் தந்தைக்கு
அவதரித்த செல்ல மகனல்லவா நீ
அனைவரையும் விட்டு போனதெங்கே சொல் நண்பா…?

கண்களில் நீர்பொழிய கைகள் நடுநடுங்க
இலக்கியம் தடுமாற இலக்கணம் தமிழ்மாற
எப்படி கவிதைகள் எழுதமுடியும்…?
உன்புகழ் எப்படி பாடமுடியும்…?

நோயோடு வந்திருந்தால் நொந்திடோமே
காலன் சாவெடுத்து போனானே நண்பா
சாகின்ற வயதா உனக்கு சாதிக்கும் வயது
சாந்தியாய் போனது ஏன் நண்பா…?

அன்று முதல் இன்று வரை – என்றும்
உன்முகம் வாடியதில்லை
உன்னோடு பேசியவர் உள்ளம் – என்றும்
துன்முகத்தை நாடியதில்லை – இன்று
மூடிவைத்து உன்முகத்தை நாங்கள்
கூடிவந்து கொண்டு செல்லும்
கொடிய நிலை ஏன் நண்பா…?

அன்னைக்கு கடைசிப்பிள்ளை
அனைவருக்கும் செல்லப்பிள்ளை
உனை விரும்பாதோர் யாருமில்லை
வெறுப்போர் என்று எவருமில்லை
கொடிய நோய்கொண்டு நீபோக
குறையுண்டோ நாங்கள் சொல்ல – இனி
நீயின்றி எங்கள் நட்பு வட்டம் தவிக்குமே நண்பா….?

சேகர் சேகர் என்று சொந்தங்கள் கலங்கி நிற்க
பாரைய்யா பாரையா என பெற்றோர்கள் புலம்பி நிற்க
நண்பர்கள் நங்கள் செய்வதறியாது திகைத்து நிற்கின்றோம்

என்றும் நட்பின் பாவெடுத்து பாடி நிற்கிறோம்
அன்பின் பூவெடுத்து போற்றி நிற்கிறோம்
நலன்கள் பல செய்து நாங்கள் என்றும் வேண்டுகிறோம்

நண்பா உன் ஆத்மா சாந்தியடையட்டும்
சாந்தி சாந்தி சாந்தி.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here