வல்வை நலன்புரி சங்கம் – கனடா ( டொரோண்டோ ) வருடாந்த கோடைகால ஒன்றுகூடல் 2019
வல்வை நலன்புரி சங்கம் – கனடா ( டொரோண்டோ ) இன் 30 ஆவது வருடாந்த ஒன்றுகூடல் எதிர்வரும் ஜூலை திங்கள் 13 நாள் வழமையான சிறப்புகளோடு Downsview Dells Park, Picnic Areas 3 & 4 (1651 Sheppard Ave W, Toronto, M3M 2X4, ON, Canada ) இல் காலை 10 மணியளவில் ஆரம்பமாகி நடைபெறும்.
வல்வையர்கள் அனைவரும் ஒன்று கூடி சந்தித்து களித்திருக்கும் நாள் இது. இது 30 வது ஒன்றுகூடலாக இருப்பாதால் இன்னும் சிறப்பான விடயங்கள் பலவற்றையும் எதிர்பார்க்க கூடியதாக இருக்கும்.
வெளிநாடுகளில் இருந்து கனடாவுக்கு கோடை கால விருந்தினர்களாக வருகின்றவர்களும், இந்த நாட்களில் நீங்கள் வருகை தந்தால் எங்கள் ஒன்றுகூடல்களிலும் கலந்து கொள்ள முடியும் என்பதால். இந்த காலத்தில் உங்கள் கனடா வருகையை திட்டமிட்டுக்கொள்ளுங்கள்.
அனைவரும் அன்றைய நாளில் ஒன்று கூடுவதுடன், கனடா – வல்வை நலன்புரிச்சங்க அங்கத்துவ பணம் செலுத்தாதவர்கள் அன்றைய நாளிலேயே அதனை செலுத்த முடியும் என்பதையும் மகிழ்வுடன் அறியத்தருகின்றோம்.
இதேவேளை வருடாந்தம் டொரோண்டோ புளூஸால் நடாத்தப்படும் மாவீரர்கள் ஞாபகார்த்த மின்னொளியில் நடைபெறும் தியாக தீபங்கள் உதைப்பாந்தாட்ட சுற்றுப்போட்டி எதிர்வரும் ஆகஸ்ட் 24 நாள் நடைபெறும் என டொராண்ரோ புளூஸ் அறிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
மேலும் இந்த ஒன்று கூடல் தொடர்பான மேலதிக விபரங்களுக்கு
பிரபு :- +1 647 667 7006
சேது மாதவன் :- +1 416 585 4259
சதிஸ்கண்ணன் :- +1 416 556 9494
நன்றி
வல்வை நலன்புரி சங்கம் – கனடா (டொரோண்டோ)
11.01.2019









