“வல்வை உதயசூரியன் கழகம் – கனடா” இனால் பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் கருவிகள் வழங்கிவைப்பு.

0
659 views

கனடா “வல்வை உதயசூரியன் கழகத்தினால் வல்வெட்டித்துறை, வல்வை உதயசூரியன் கழகம் மற்றும் வல்வை விக்னேஸ்வர சன சமூக சேவா நிலையத்தினூடாக முல்லைத்தீவு மாவட்டத்தின் சில பாடசாலை மாணவர்களுக்கும் கிளிநொச்சி மாவட்டத்தின் ஒரு பாடசாலை மாணவர்களுக்கும் கற்றல் கருவிகள் வழங்கப்பட்டுள்ளன.

வல்வை உதயசூரியன் கழக கனடாக் கிளையின் நிதியுதவியில் வல்வை விக்கினேசுவரா சனசமூகசேவா நிலையம், வல்வை உதயசூரியன் கழகம் ஆகியன இணைந்து இந்த கற்றல் கருவிகளை பாடசாலை மாணவர்களுக்கு வழங்கியுள்ளன.

முல்லைத்தீவு மாவட்டத்தின் மிகவும் பின்தங்கிய கிராமங்களிலுள்ள தேறாங்கண்டல் அ.த.க பாடசாலை, ஐயங்கன்குளம் அ.த.கபாடசாலை மற்றும் புத்துவெட்டுவான் அ.த.க பாடசாலை, பழையமுறிகண்டி பாடசாலை ஆகியபாடசாலைகளின் மாணவர்களுக்கும் கிளிநொச்சி திருவையாறு மகா வித்தியாலய மேல்வகுப்பு மாணவர்களுக்குமே இவ்வாறு கற்றல் கருவிகள் வழங்கப்பட்டுள்ளன.

மேலும் 09.01.2019 அன்று இடைபெற்ற இந் நிகழ்வுகள் அந்தந்தப் பாடசாலைகளின் பிரதான மண்டகங்களிலே இடம்பெற்றன.

அத்துடன் தேறாங்கண்டல் அ.த.க பாடசாலையில் தெரிவுசெய்யப்பட்ட 80 மாணவர்களுக்கும், ஐயங்கன்குளம் அ.த.க பாடசாலையில் தெரிவுசெய்யப்பட்ட 90 மாணவர்களுக்கும் மற்றும் புத்துவெட்டுவான் அ.த.க பாடசாலையிலுள்ள 20 மாணவர்களுக்கும், பழையமுறிகண்டி பாடசாலையிலுள்ள 10 மாணவர்களுக்கும், திருவையாறு மா.வி பாடசாலையிலுள்ள 108 மானவர்களுமாக மொத்தம் ஐந்து பாடசாலைகளைச் சேர்ந்த 308 மாணவர்களுக்கு இவ்வாறு கற்றல் கருவிகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.

இந் நிகழ்வுகளில் முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா – ரவிகரன் அவர்கள், வல்வை உதயசூரியன் கழக கனடா கிளையின் உறுப்பினர் திரு.மு.செயதரன் (மனோக்குட்டி), யாழ்ப்பாணம் வல்வை விக்னேஸ்வரா சனசமூக சேவா நிலையத்தின் தலைவரான திரு.விமலதாஸ் – கவிச்செல்வன், மற்றும் உறுப்பினரான திரு.செ.செனார்த்தன் இவர்களுடன் திரு.பு.கேதீசுவரன் (தேறாங்கண்டல் அ.த.க பாடசாலை முதல்வர்), திருமதி.பார்த்தீபன் – இந்திராணி (ஐயங்கன்குளம் அ.த.க பாடசாலை முதல்வர்), திரு.அந்தோனிப்பிள்ளை – அன்ரன்டயசு (புத்துவெட்டுவான் அ.த.க பாடசாலை முதல்வர்),துணுக்காய்ப் பிரதேசசபை உறுப்பினர் சற்குணநாதன் – சுயன்சன், கரைதுறைப்பற்றுப் பிரதேசசபை உறுப்பினர் சின்னராசா – லோகேஸ்வரன், கிளிநொச்சி திருவையாறு மகா வித்தியாசாலை முதல்வர் P. ஸ்ரீதரன் ஆகியோரோடு பாடசாலை மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் என பலரும் இந் நிகழ்வுகளில் கலந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்த தினத்தில் வல்வை உதயசூரியன் கழகம், கனடாவினால் வழங்கப்பட்ட உதவிகளின் மூலமாக ஐந்து பாடசாலைகளைச் சேர்ந்த 308 மாணவர்கள் கற்றல் உபகரணங்களை பெற்றிருந்தார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here