வடக்கில் நிலவும் குளிர்

0
680 views

நாடு முழுவதும் குறிப்பாக வடக்கு,வடமத்திய, மத்திய, வடமேல் மற்றும் கிழக்கு மாகாணங்களில் குளிரான வானிலை தொடர்ந்து நிலவும் என எதிர்பார்க்கப்படுவதாக இலங்கை வளிமண்டலவியல் திணைக்கடுயஅ ட்தெரிவித்துள்ளது.

இதுதொடர்பில் இன்று வெளியிட்டுள்ள வானிலை அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது;

மத்திய மாகாணத்திலும் இரத்தினபுரி, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பிரதானமாக சீரான வானிலை தொடர்ந்து நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

மேல் மற்றும் ஊவா மாகாணங்களிலும் அம்பாறை, புத்தளம், கேகாலை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 40 கிலோ மீற்றர் வரை அதிகரித்த வேகத்தில் ஓரளவு பலத்த காற்று வீசக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

மத்திய மாகாணத்திலும் இரத்தினபுரி மாவட்டத்திலும் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை எதிர்பார்க்கப்படுகின்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here