காணாமல் போன குடும்பஸ்தரின் சடலம் மீட்பு

0
545 views

வடமராட்சி அல்வாய் மாயக்கைப் பகுதியிலுள்ள குளத்தில் நீராடச் சென்று காணாமல் போன குடும்பஸ்தரின் சடலம் கடற்படையினரின் உதவியுடன் நேற்று மீட்கப்பட்டது.
அல்வாய் கிழக்கு மாயக்கையைச் சேர்ந்த தம்பிராசா சந்திரகுமார்(வயது47)என்ற நான்கு பிள்ளைகளின் தந்தையார் நேற்று முன்தினம் குறிப்பிட்ட குளத்தில் நீராடச் சென்ற வேளை காணாமால் போயிருந்தார்.


இது தொடர்பாக அப்பகுதி இளைஞர்கள் முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் சி.அகிலதாஸின் கவனத்திற்கு கொண்டு வந்தனர்.
இதனையயடுத்து கடற்படையிருக்கு தெரியப்படுத்தப்பட்டது.
நேற்றுக்காலை அவ்விடத்திற்கு வந்த கடற்படையின் சுழியோடிகள் சுமார் ஒரு மணிநேர தேடுதலின் பின் காணாமல் போனவரின் சடலத்தை மீட்டு எடுத்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here