இந்தியத் தூதுவர் தரண்ஜித்சிங் சந்து உள்ளிட்டோர் நேற்றைய தினம் நல்லூர்க் கந்தன் ஆலய வழிபாட்டில் ஈடுபட்டனர்.
யாழ்ப்பாணத்திற்கு இரு நாள் பயணமாக வருகை தந்துள்ள இலங்கைக்கான இந்தியத் தூதுவர் மற்றும் யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள இந்தியத் துணைத் தூதரகத்தின் துணைத் தூதுவர் பாலச்சந்திரன் உள்ளிட்டோர் நேற்றுக் காலையில் நல்லைக் கந்தன் ஆலயத்தில் விசேட வழிபாட்டில் ஈடுபட்டனர்.










