அரச அதிபர் வெற்றிக்கிண்ணத்துக்கான பெண்களுக்கான கரம் சுற்றுப்போட்டியில் பருத்தித்துறை பிரதேச செயலக அணி சம்பியன் கிண்ணத்தை சுவீகரித்தது.
அனச அதிபர் வெற்றிக்கிண்ணத்துக்கான கரம் சுற்றுப்போட்டியின் இறுதியாட்டம் நேற்று முன் தினம் இடம்பெற்றது.இவ்விறுதியாட்டத்தில் பருத்தித்துறை பிரதேச செயலக அணியும் யாழ்ப்பாண பிரதேச செயலக அணியும் மோதின.
மூன்று தனிநபர் ஆட்டத்தையும் இரண்டு இரட்டையர் ஆட்டத்தையும் கொண்ட இப்போட்டியில் முதலில் இடம்பெற்ற ஒற்றையர் ஆட்டத்தில் இரு அணியினரும் தனி ஒரு வெற்றியைப் பதிவு செய்தனர்.அடுத்து இடம்பெற்ற இரட்டையர் ஆட்டத்திலும் இரு அணியும் தலா இரண்டு வெற்றிகளை பதிவு செய;ய வெற்றியாளரைத் தீர்மானிப்பதற்காக வழங்கப்பட்ட இறுதிச்சுற்றில் பருத்தித்துறை அணி வெற்றி பெற்று 3:2 எனத;தொடரைக் கைப்பற்றியது பருத்தித்துறை பிரதேச செயலக அணி.










