நடுவரின் சூழ்ச்சியால் சம்பியன் பட்டத்தை இழந்தது யாழ் மாவட்ட கிறிக்கற் அணி.
இளைஞர்கழகங்ஙளுக்கிடையிலான தேசிய மட்டக் கறிக்கற் போட்டியியின் இறுதியாட்டம் நைற்று முன்தினம் அனுராதபுரம் பொது விளையாட்டரங்கில் இடம்பெற்றது.
இவ்விளுதிமாட்டத்தில் யாழ் மாவட்ட இளைஞர் கழக அணியும் அம்பாளை மாவட்ட இளைஞர் கழக அணியும் மோதின.இதில் நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற யாழ் மாவட்ட அணி முதலில் களத்தடுப்பைத் தேர்வு செய்தது.இதனையடுத்து முதலில் துடுப்பெடுத்தாடிய அம்பாறை மாவட்ட அணி 6 பந்துப்பரிமாற்றங்கள் நிறைவில் 4 இலக்குகளை இழந்து 42 ஓட்டங்களைப் பெற்றது .
பதிலுக்கு 43 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு களமிறங்கிய யாழ் மாவட்ட அணி 6 பந்துப் பரிமாற்றங்கள் நிறைவில் 6 இலக்குகளை இழந்து 40 ஓட்டங்களைப் பெற்று 2 இரண்டு ஓட்டங்களால் தோல்வியைத்தழுவியது.ஆட்டத்தின் இறுதிப்பந்துப்பரிமாற்றத்தில் யாழ் மாவட்ட அணி வெற்றிக்கு 16 ஓட்டங்கள் தேவை என்ற நிலையில் இரண்டு பந்துகளில் 4 ஓட்டங்கள் பெறப்பட மூன்றாவது பந்தை எதிர்கொண்ட துவாரகன் எல்லைக்கோடுகளைத் தாண்டி 6 ஓட்டங்களைப் பெற ஆட்டம் சூடுபிடிக்கத் தொடங்கியது.இந்நிலையில் இறுதி2 பந்துகளில் வெற்றிக்கு 5 ஓட்டங்கள் தேவை என்ற நிலையில் தூவாரகனால் ஓங்கி அடிக்கப்பட்ட பந்து எல்லைக் கோடுகளுக்கு மேலாகச் செல்ல ஓடிச் சென்ற அம்பாறை வீரர் வெளியில் சென்று பந்தை உள்ளே தட்டிவிட்டார்.இதற்குள் ஆறு ஓட்டங்கள் என்பதை உறுதிப்படுத்திய யாழ் மாவட்ட வீரர்கள் மைதானத்துள் வெற்றிக்களிப்பில் உள் நுழைந்து விட்டனர்.ஆனால் நடுவர் களத்தடுப்பாளரின் சொல்லைக்கேட்டு அந்த ஆறு ஓட்டங்களை நிராகரிக்க யாழ் மாவட்ட வீரர்கள் செய்வதறியாது நடுவர்களிடம் உண்மை நிலையை விளக்கிய போதும் அவர்கள் அதனை ஏற்றுக் கொள்ளவில்லை.வெளியில்நின்ற பெரும்பான்னை இன பார்வையாளர்களும் அது ஆறு ஓட்டங்கள் என்பதனை நடுவர்களுக்கு கூறியபோதும் அதனையும் நிராகரித்தனர்.இறுதியில் 40 ஓட்டங்களை மட்டும் பெற்று இரண்டு ஓட்டங்களால் தோல்வியைத் தழுவி இரண்டாமிடத்தைப் பெற்றுக் கொண்டது யாழ் மாவட்ட இளைஞர் கழக அணி










