மரண அறிவித்தல் திருமதி சிவகுருநாதபிள்ளை அரியரெத்தினம்

0
397 views

 திருமதி சிவகுருநாதபிள்ளை அரியரெத்தினம்

தோற்றம் :20/12/1925 மறைவு:05/05/2017
வல்வெட்டித்துறை சந்தி ஒழுங்கையை பிறப்பிடமாகவும் வல்வெட்டித்துறை உலகுடையபிள்ளையார் கோவில் ஒழுங்கையை வதிவிடமாகவும் கொண்ட திருமதி சிவகுருநாதபிள்ளை அரியரெத்தினம் 05/05/2017 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார் காலஞ்சென்ற கந்தசாமி சிவகுருநாதபிள்ளையின் அன்பு மனைவியும்
காலஞ்சென்ற கந்தசாமி – சின்னத்தங்கம் தம்பதிகளின் பாசமிகு மகளும்,
காலஞ்சென்ற கந்தசாமி – வள்ளியம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும் ஆவார்.
அன்னார் காலஞ்சென்ற தர்மலிங்கம் (வடிவேல் ),காலஞ்சென்ற சபாரத்தினம் (சேர்மன்),காலஞ்சென்ற முருகுப்பிள்ளை(கடவுள் அப்பா),காலஞ்சென்ற பாலசுப்பிரமணியம் மற்றும் நவரத்தினம் ஆகியோரின் பாசமிகு சகோதரியும் ஆவார்.
அன்னார் காலஞ்சென்ற குமரகுரு (வாத்தியார் ),காலஞ்சென்ற பவளக்கண்டு,காலஞ்சென்ற கிருஷ்ணவேனியம்மா,காலஞ்சென்ற புவனேஸ்வரி மற்றும் புஸ்பவதியம்மா ஆகியோரின் மைத்துனியும் ஆவார்.
அன்னார் இராஜேஸ்வரி(அரி அக்கா),புவனேஸ்வரி(தக்கினி அக்கா ), இரத்தினேஸ்வரி(ரெத்தினா) , அமரர் உலகராசா( மூத்த உறுப்பினர்- தமிழீழ விடுதலை இயக்கம்) மற்றும் உலகேஸ்வரி ஆகியோரின் பாசமிகு தாயாரும் ஆவார்.
அன்னார் காலஞ்சென்ற பொன்னம்பலம் ,காலஞ்சென்ற சபாரத்தினம், ,காலஞ்சென்ற சிவநாதன் மற்றும் செல்வசிகாமணி ,சுபாஜினி ஆகியோரின் மாமியாரும் ஆவார் மற்றும் பேரப்பிள்ளைகள்,பூட்டப்பிள்ளைகள் ,பாட்டப்பிள்ளைகளின் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 07/05/2017 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப.09:00 மணியளவில் அவரது இல்லத்திலிருந்து புறப்பட்டு வல்வெட்டித்துறை ஊரணி இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர்,நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்.
தொடர்புகளுக்கு
உலகேஸ்வரி (மகள்-இலங்கை)0094-750892606
சந்திரன் (பேரன்-இலங்கை )0094-767399785
தவகுமார்(பேரன் -லண்டன்) -0044-7984355124
உதயன் (பேரன் -லண்டன் )-0044-7415294535
மணிவண்ணன் (பேரன் -லண்டன்) -0044-7440602618

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here