இலங்கைக்கு வரவிருக்கும் ரஜனிகாந்த்

0
1,172 views

நடிகர் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது ஷங்கர் இயக்கி வரும் 2.0 படத்தில் நடித்து வருகிறார். எந்திரன் படத்தின் இரண்டாவது பகுதியான இந்த படத்தை லைக்கா நிறுவனம் தயாரித்து வருகிறது.
லைக்காவின் சுபாஸ்கரன் இலங்கையில் இடம்பெயர்ந்த தமிழர்களுக்காக 150 வீடுகளை இலவசமாக கட்டி தரவுள்ளார். அந்த வீடுகளை மக்களுக்கு தரும் நிகழ்ச்சி அடுத்த மாதம் 9ம் தேதி நடைபெறவுள்ளது.
அதில் கலந்துகொள்ளுமாறு ரஜினிக்கு அழைப்பு வந்துள்ளது. ஈழத்தமிழர்களுக்கான நிகழ்ச்சி என்பதால் உடனே ரஜினி ஒப்புக்கொண்டாராம்.இந்த நிகழ்ச்சியில் இலங்கையை சேர்ந்த பல்வேறு தமிழ் அரசியல்வாதிகளும் கலந்துகொள்வார்கள் என கூறப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here