வடமராட்சி வலயப்பாடசாலைகளுக்கிடையிலான வலய மட்ட கோட்ட மட்டத்தமிழ் தினப்போட்டிகள நாளை வெள்ளிக்கிழமை முதல் நடைபெறவுள்ளன

0
205 views

. இதில் பருத்தித்துறை கோட்டப் பாடசாலைகளுக்கிடையிலான எழுத்தாக்கப்போட்டி நாளை பி.ப 12.30 வேலாயுதம் மகாவித்தியாலயத்திலும் கரவெட்டி கோட்டத்திற்கான போட்டிகள் பிற்பகல் 12.30 மணிக்கு நெல்லியடி மத்திய கல்லூரியிலும் மருதங்கேணி கோட்டத்துக்குட்பட்ட பாடசாலைகளில் நாகர்கோவிலிலுக்கு முன்னுள்ள பாடசாலைகளுக்கு பிற்பகல் 12.30 மணிக்கு அம்பன் அ த க பாடசாலையிலும் செம்பியன்பற்றைதொடக்கம் கட்டைக்காடு வரையான பாடசாலைகளுக்கு உடுத்துறை மகா வித்தியாலயத்திலும் நடைபெறவுள்ளது.

கோட்டமட்ட மொழித்திறன் போட்டியில் பருத்தித்துறைக் கோட்டத்திற்கான போட்டிகள் 18ஆம்19ஆம் திகதிகளில் வட இந்துக்கல்லூரி அதே தினம் கரவெட்டிக்கோட்டப் பாடசாலைகளுக்கான போட்டிகள் நெல்லியடி மத்திய கல்லூரியிலும் மருதங்கேணி காட்டத்திற்கான போட்டிகள் தாளையடி றோ க த க பாடசாலையிலும் –
கலைத்திறன் போட்டிகளில் பருத்தித்துறைக் கோட்டப்போட்டிகள் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 29ஆம் 30 ஆம் திகதிகளில் மெதடிஸ்த பெண்கள் உயர்தரப்பாடசாலையிலும் கரவெட்டிக்கோட்டத்திற்கான போட்டிகள் எதிர்வரும் மே மாதம் 6ஆம்7ஆம் திகதிகளில் நெல்லியடி மத்திய கல்லூரியிலும் மருதங்கேணி கோட்டத்திற்கான போட்டிகள் எதிர்வரும் ஏப்ரல் 27ஆம் திகதி தாளையடி றோகதக பாடசாலையிலும் இடம்பெறவுள்ளன.
அதேவேளை வலய மட்ட எழுத்தாக்கப்போட்டிகள எதிர்வரும் 23ஆம் திகதி பிற்பகல் 13.30 மணிக்கு நெல்லியடி மத்திய கல்லூரியிலும் வலய மட்டுமே மொழித்திறன் மற்றும் கலைத்திறன் போட்டிகள் மே மாதம் 13ஆம் 14ஆம் மற்றும் 15ஆம் திகதிகளில் நெல்லியடி மத்திய கல்லூரியிலும் இடம்பெறவுள்ளன

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here