இரரமதாஸ் மோகனதாஸ் அவர்களுக்கு புலம்பெயர் வல்வைக்கலைஞர்களின் கண்ணீர் அஞ்சலிகள்

0
439 views
இரரமதாஸ் மோகனதாஸ் அவர்களுக்கு புலம்பெயர் வல்வைக்கலைஞர்களின்
கண்ணீர் அஞ்சலிகள்
சிதம்பரப்பிள்ளை வள்ளலால் வல்வையர் சமுதாயத்துக்கு அளிக்கப்பட்; பெறுமதியை அளவிடமுடியாத  பொக்கிசம்தான் சிதம்பராக்கல்லூரி. ஆந்த பொக்கிசத்திலிருந்து வந்;தவர்களால்தான் வல்வையின் வரலாறு அலகரிக்கப்பட்டுக்கொண்டு இருக்கின்றது.
சிதம்பராக்கல்லூரியின் மாணவனாக இருந்து பின்னர் ஓவியம் சரித்திரம்  போன்ற பாடங்களுக்கு ஆசிரியராக இருந்தவர்தான் பாலசுப்பிரமணியம் அவர்கள்.
பாலா மாஸ்டர் அவர்கள் தமிழ்நாட்டில் புகழ் பெற்ற ஓவியர் மதன் அவர்களுடன் ஓரே கல்லுரியில் ஓவியத்தில் பட்டம் பெற்றவர்கள்;.
மோகன் அவர்கள் சிதம்பராவில் ஆரம்பகால ஓவியங்களில் மேலும் தேர்ச்சி பெற்ற காலங்களில் இந்தியன் மை என்று சொல்லக்கூடிய கறுப்பு மையாலும் சிறிய பேனா நிப்பினால் ஓசியங்கள் வரiயும் காலச்சார நிகழ்வு வல்வை இழைஞர்களிடம் பரவியிருந்து. அப்போது எம் ஓசியர் மோகனுடன் காலஞ் சென்ற கலாநிதி பரமசிவம் நடராஜா வீதி சண்முகதாஸ் செல்வச்சந்திரன் போன்றோர் வரைந்த உலக பிரமுகர்கள் லெனின் கென்னடி நேருஜி காந்தி இவர்களின் ஓவிய புகைப்படங்கள் சில வல்வையின் வாசிகசாலைகளையும் அலகரிதிருக்கின்றது. இவற்றின் சிறிய புகைப்படங்களை வல்வையின் வேல் ஸ்ருடியோவில் 10 சதத்திற்கு விற்பiனை செய்யப்பட்டது.
இதன் பின்னர் எங்கள் ஓவியர் மோகன் அவர்கள் தொழில் முறையில் பிரவேசித்து கண்ணடியில் உட்புறம் அக்கால பழைய இசைத்தட்டுகளில் கற்பனைக்காட்சிகள் ஓவியம் வரைவதில் பிரபலம் பெற்றார்.; இவர் உருவாக்கிய அடை யாள சின்னம்போல புலம்பெயர் வல்வெட்டித்துறை சங்கங்களிற்காக அச்சு அசலான அன்னபூரணியின் படத்தினை மையப்படுத்தி இவர் உருவாக்கிய சின்னமும் அதிஅற்புதமானது.
இயற்கையிலேயே கலைத்திறமை வாய்க்கப்பெற்ற இவர் பாடசாலைக்காலத்தில் வல்வெட்டித்துறை சிதம்பராக்கல்லூரியில் பாலாமாஸ்டரிடம் ஓவியக் கலையை கற்றிருந்தார். பின்பு இருபதாம் நூற்றாண்டின் சிறந்தஓவியர் என தமிழகத்தின் முன்னால் முதலமைச்சரான சி.என்.அண்ணாத்துரையால் கொளரவிக்கப்பட்ட மு.மாதவனால் பட்டை தீட்டப்பட்டவர். ஓவியம் சோறுபோடுமா என்றவர்கள் மத்தியில் ஓவி யத்தை முழுநேரத்தொழிலாக வரித்துக்கொண்டு வாழ்ந்து காட்டியவர். வல்வெட்டித் துறை சுங்கவீதியில் தனது ஓவியக்கடையை ஆரம்பித்து பருத்தித்துறை சென்றல் தியேட்டருக்கு மருகாமையில் ‘மோகன்ஆட்ஸ்’ எனும்பெயரில் இவரது வியாபார ஸ்தானம் பரந்து விரிந்தது. வடமராட்சியின் ஒவ்வொரு ஊரிலும் கிராமத்திலும் இவரது ஓவியங்கள் அன்று துலங்கின. வல்வெட்டித்துறையின் சமூகசிற்பியான பெரியவர் வெங்கடாசலத்தையும் வைத்திலிங்கபுலவரையும் தத்ரூபமாக வரைந்து எங்கள் மத்தியில் நடமாட வைத்த வர் மோகண்ணாதான். வல்வெட்டித்துறையில் யுத்த காலத்திற்கு முன்பு வருடாவருடம் களைகட்டும் அருள்மிகு முத்துமாரியம்மனின் இந்திரவிழாவில் இவரது கைவண்ணத்தில் உருவாகும் போட்டிக்கோவில் இவரது திறமை அதிஅற்புதமாக ஜொலிக்கும். வல் வெட்டித்துறையின் கையெழுத்து சஞ்சிகைகளான அலைஒளி மற்றும் அருவி என்பன மோகண்ணாவின் வண்ணச் சித்திரங்களிற்காகவே பலரின் கைபட்டு விரிந்தன. 1976 இல் பருத்தித்துறை நவீன சந்தை திறக்கப்பட்டபோது அதன் தொண்ணூறுவீதமான விளம்பரபலகைகளை உருவாக்கியமைக்காக அன்றைய முதல்வர் நமசிவாயம் நடராசாவினால் தங்கச் சங்கிலி அணிவித்து பாராட்டப்பெற்றவர். கலைக்காகவே பிறந்து கலைக்காகவே வாழ்ந்த இவர் திரு.வையாபுரிஅப்பா அவர்களிடம் தற்பாதுகாப்பு மற்றும் உடற் பயிற்சிகளும் கற்றிருந்தார். இதுபோலவே சிலம்பக்கலையை மதிப்புக் குரிய சோதிசிவத்திடமும் கராட்டிக்கலையை ஆசான் இரத்தினசோதியிடமும் கற்று தேறியிருந்தார். கலைக் காவிய நாயகர்களான வல்வை ஹெலியன்ஸ் நண்பர் கள் நாடககுழுவினரின் நடிகரும் ஒப்பனை கலையருமாக மிளிர்ந்தவர்.
வல்வையில் மோகனுக்கு முன்னர் கிருபானந்தவாரியாரின் பிரசங்கச்சீடன் சிவஅன்பு அவர்களின் தகப்பானார்  ஓவியசிற்பக்கலையிலும் ரெப்பிறி சுப்பண்ணா அவர்கள் வல்வை முத்துமாரியின் வாசல் மேல் மண்டபத்தில் குறுகிய இடைவெளியில் படுத்துக்கொண்டு வரையப்பட்ட ஓவியங்களால் வல்வை வரலாறு  பதிவு செய்யப்பட்டது. வல்வையில் மோகனிடம் சிறுவராக ஓவிங்கள் கற்றவர்கள் இன்று இங்கிலாந்தில் பெருபணம் சம்பாதிக்கும் மைபூசும் கலைஞராக வலம் வருகின்றார்கள். மோகனைப்போல் வல்வைக்கும் நலன்புரிச்சங்களுக்கும் தொண்டாற்றிக்கொண்டிருக்கிறார்கள்.
வல்வை பேப்பர் பொன்னம்பலத்தின் மகனின் முகதூலில் பகிரப்பட்ட நிறைவானதில் ஒரு  பகுதி உங்களுக்கு பகிரப்பட்டுள்ளது. எமது நன்றிகள்.
ஓம் சாந்தி
சுபம்
புலம்பெயர்வல்வைக்கலைஞர்களின் சாhபில்
வல்வை மாமாச்சி. இங்கிலாந்து.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here