வல்வை தீருவில் இளைஞர் விளையாட்டுக்கழகம் 3 ஆவது வருடமாக நடாத்தும் அணிக்கு 9 நபர் கொண்ட உதைபந்தாட்டச் சுற்றுப்போட்டியின் இறுதி போட்டியில் தீருவில் விளையட்டுக்கழகத்தை 3-0 என்ற கோல் கணக்கில் வல்வை ரேவடி ஐக்கிய இளைஞர் விளையட்டுக்கழகம் வெற்றி கொண்டது.
வல்வை தீருவில் விளையாட்டுக் கழகம் 3 ஆவது வருடமாக நடாத்தும் வல்வை விளையாட்டுக் கழகங்களுக்கு உட்பட்ட கழகங்களுக்கிடையிலான 7 நபர் மற்றும் 9 நபர் கொண்ட உதைபந்தாட்டச் சுற்றுப் போட்டியின் வரிசையில் 9 நபர் கொண்ட போட்டியின் இறுதிப்போட்டி இன்று தீருவில் மைதானத்தில் நடைபெற்றது.
இந்த இறுதி ஆட்டத்தில் ரேவடி ஐக்கிய இளைஞர் விளையாட்டுக் கழகத்தை எதிர்த்து தீருவில் விளையாட்டுக் கழகம் மோதியது. விறுவிறுப்பாக நடைபெற்ற இறுதிப்போட்டியில் முற்பாதியில் 02 கோல்களை அடித்த ரேவடி விளையாட்டுக்கழகம் பிற்பாதியில் மேலும் ஒரு கோலை அடித்து வெற்றியை உறுதி செய்தது.
ரேவடி விளையாட்டுக் கழகம் சார்பாக தமிழரசன் 02, சஞ்சீவன் 01 கோல்களை அடித்தனர். 2011 மற்றும் 2014 ம் ஆண்டுகளில் நடைபெற்ற சுற்றுப்போட்டிகளில் வல்வை றெயின்போ விளையாட்டுக்கழகம் வெற்றிக்கிண்ணத்தைச் சுவீகரித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.










