மரண அறிவித்தல் – திருமதி இராமநாததாசன் நாகசுந்தரேஸ்வரி

0
441 views

மரண அறிவித்தல்

அமரர் திருமதி இராமநாததாசன் நாகசுந்தரேஸ்வரி

பிறப்பு: 11.12.1934   இறப்பு 07.03.2024

வல்வெட்டித்துறை நெடியகாட்டைப் பிறப்பிடமாகவும், ஆலடி ஒழுங்கையை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி இராநாததாசன் நாகசுந்தரேஸ்வரி இன்று 07.03.2024 காலமாகி விட்டார்.

அன்னார் காலஞ்சென்ற இராமநாததாசனின் அன்பு மனைவியும், காலஞ்சென்றவர்களான ஆறுமுகம் (கார்கார கண்மணி அம்மான்) சீதாலட்சுமி ஆகியோரின் அன்பு மகளும் காலஞ்சென்றவர்களான வைத்தியலிங்கம் பொன்னாம்பிகை ஆகியோரின் ஆகியோரின் மருமகளும் ஆவார்.

அன்னார் பிறேமா, இரவீந்திரன், இராயேந்திரா, பத்மா, ஜமுனா, விமலா மற்றும் காலஞ்சென்ற குமுதா ஆகியோரின் தாயாரும், பாலச்சந்திரன், பெலிசீயா, அஜிதா, சபாரட்ணம், மணிவண்ணன், ஞானவேல் ஆகியோரின் அன்பு மாமியாரும் ஆவார்.

அன்னார், காலஞ்சென்ற தவானந்தவேலின் பாசமிகு சகோதரியும் மற்றும் சிறிதரன் சந்திரவதனா ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரியும், காலஞ்சென்றவர்களான ஏகம்பதாசன், சிவகுகதாசன், மகேசதாசன், நடேசதாசன் மற்றும் கதிர்காமதாசன், கனகாம்பிகை, அன்னபூரணி, இராசலட்சுமி ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.

அன்னார், சசிகரன், கலைவாணி, கலைப்பிரியா, இராஜசேகர், சந்திரசேகர், சுகிர்தன், திவ்யா, கிருபாலினி, சிவகாமி, பகீரதன், சங்கீதன், கல்யாணி, கீர்த்தனா, சாமினி ஆகியோரின் அன்புப் பேர்த்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக் கிரியைகள் ஆலடி ஒழுங்கையிலுள்ள அவரது இல்லத்தில் 08/03/2024 காலை 7 மணிக்கு நடைபெற்று, தகனக் கிரியைக்காக காலை 9 மணிக்கு ஊறணி இந்து மயானத்துக்கு எடுத்துச் செல்லப்படும்.

தகவல்:

மகன் இராயேந்திரா