மரணஅறிவித்தலும் இறுதிக்கிரியை விபரங்களும் – அமரர் திருமதி இராமநாதன்‌ மகாலெட்சுமி

0
462 views

மரண அறிவித்தல்

திருமதி. இராமநாதன் மகாலெட்சுமி
தோற்றம்: 01.03.1935 மறைவு: 27.02.2023

வல்வெட்டித்துறை வேம்படி ஒழுங்கையை பிறப்பிடமாகவும் பிரான்ஸ் Argenteuil, Cergy நகரை வதிவிடமாகவும் கொண்ட திருமதி இராமநாதன் மகாலெட்சுமி அவர்கள் திங்கட்கிழமை 27/02/2023 அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான வயித்தியலிங்கம்பிள்ளை தெய்வானைநாயகி அம்மாவின் அன்பு மகளும்
காலஞ்சென்றவர்களான வைத்திலிங்கம் மீனாட்சிப்பிள்ளையின் அன்பு மருமகளும்
காலஞ்சென்ற இராமநாதனின் அன்பு மனைவியும்
சங்கரலிங்கம், மனோகர், காலஞ்சென்ற ராஜ்குமார் ஆகியோரின் பாசமிகு தாயாரும்
மலர், அமுதசெல்வி ஆகியோரின் அன்பு மாமியாரும்
கணேஷ், தினேஷ், தனுஷ், முகேஷ் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

பார்வையிடும் இடமும் நேரமும் பற்றிய விபரம்:
வியாழக்கிழமை 02/03/2023 3.00 PM – 4.00 PM
Funérarium des Joncherolles, 95 rue Marcel Sembat, 93430 Villetaneuse
சனிக்கிழமை 04/03/2023 3.00 PM – 4.00 PM
Funérarium des Joncherolles, 95 rue Marcel Sembat, 93430 Villetaneuse

அன்னாரின் இறுதிக்கிரியைகள் திங்கட்கிழமை 06/03/2023 காலை 10.00 மணிமுதல் மதியம் 12.00 மணிவரை நடைபெற்று, அதன் பின்னர் அன்னாரின் பூதவுடல் மதியம் 1.30 மணியளவில் தகனம் செய்யப்படும் என்பதனை ஆழ்ந்த அனுதாபத்துடன் தெரிவித்துக் கொள்கின்றோம். இறுதிக்கிரியை நடைபெறும் இடம்:
Crematorium des Joncherolles, 95 rue Marcel Sembat, 93430 Villetaneuse.

தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
சங்கர் (பிரான்ஸ்): 00 33 6 67 46 11 32
மனோ (பிரான்ஸ்): 00 33 6 11 92 36 26

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here