உதயசூரியன் கழக வீர வீராங்கனைக்களுக்கான புதிய சீருடை அறிமுகம்

0
552 views

வல்வை உதயசூரியன் கழகத்தின்
60வது ஆண்டை முன்னிட்டு இன்று உதயசூரியன் கழக உதைபந்தாட்ட வீரர்களுக்கான புதிய சீருடையும் உதயசூரியன் வீராங்கனைகளுக்கான புதிய சீருடையும் இன்று உதயசூரியன் உல்லாச கடற்கரையில் அறிமுகம் செய்யப்பட்டது.

இந்த அறிமுக விழாவின் போது வைர விழாவினை முன்னிட்டு உதயசூரியன் கழக வீர வீராங்கனைகளால் கேக் வெட்டி வைரவிழா கொண்டாடப்பட்டது.

ஆண்களுக்கான சீருடையினை (75000/=) சந்தானகிருஷ்ணன் ஜெயகிருஷ்ணன் (கிசோக் அண்ணா) அவர்கள் லண்டன் உதய சூரியன் கழகத்தின் ஊடாக எமக்கு அன்பளிப்பு செய்திருந்தார்.

பெண்களுக்கான சீருடையினை (30000/=) அவுஸ்ரேலியாவில் வசிக்கும் கஜேந்திரன் அவர்கள் அன்பளிப்பு செய்திருந்தார்.

இருவருக்கும் எமது உதயசூரியன் கழகத்தின் சார்பிலும் வீர, வீராங்கனைகள் சார்பிலும் தெரிவித்துக் கொள்கின்றோம்.

இன்றைய அறிமுக நிகழ்வானது புதிதாக அமைக்கப்பட்டு வரும் பரஞ்சோதியப்பா சிறுவர் பூங்காவில் நடைபெற்றது.

இந்த வருடம் உதைபந்தாட்ட வீரர்களுக்கு உதயசூரியன் கழகத்தினால் 12 உதைபந்தாட்ட காலணிகள் புதிதாக வழங்கப்பட்டது. மேலும் லண்டனில் இருந்து வருகை தந்த மாறன் அண்ணா அவர்களினால் 2 உதைபந்தாட்ட காலணிகளும் அன்பளிப்பு செய்யப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here