இலங்கை வந்துள்ள ஐரோப்பிய ஒன்றிய உயர்மட்டத் தூதுக் குழுவினர், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரை இன்று மாலை சந்தித்துக் கலந்துரையாடினர்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் எம்.பியின் கொழும்பு இல்லத்தில் இந்தச் சந்திப்பு நடைபெற்றது.
இதில் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் எம்.பியுடன் கூட்டமைப்பின் பேச்சாளர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் எம்.பி., கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளின் தலைவர்களான மாவை சேனாதிராஜா (தமிழரசுக் கட்சி), செல்வம் அடைக்கலநாதன் எம்.பி. (ரெலோ), தர்மலிங்கம் சித்தார்த்தன் எம்.பி. (புளொட்) மற்றும் எம்.பிக்களான இராசமாணிக்கம் சாணக்கியன், கோவிந்தன் கருணாகரம் ஆகியோரும் பங்குபற்றினர்.
இதன்போது வடக்கு, கிழக்கில் தமிழ் மக்கள் எதிர்நோக்கும் பல்வேறு பிரச்சினைகள் தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர், ஐரோப்பிய ஒன்றிய உயர்மட்டத் தூதுக் குழுவினருக்கு விளக்கமளித்தனர்.
பயங்கரவாதத் தடைச் சட்டம், தமிழ் அரசியல் கைதிகள் விவகாரம் மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தால் இலங்கைக்கு வழங்கப்படும் ஜி.எஸ்.பி. பிளஸ் வர்த்தக சலுகை உள்ளிட்ட விடயங்கள் தொடர்பிலும் இதன்போது கலந்துரையாடப்பட்டன.







