தெற்காசியாவில் மிகப்பெரிய சிறுநீரக மருத்துவமனை பொலன்னறுவையில் இன்றைய தினம் திறந்து வைக்கப்பட்டுள்ளது. இம் மருத்துவமனையை அமைப்பதற்கான முயற்சியை முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன மேற்கொண்டிருந்தார்.
இந்நிகழ்வில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராய்ச்சி, கொவிட் 19 தடுப்பு இராஜாங்க அமைச்சர் சுதர்சினி பெர்னாண்டோ புள்ளே மற்றும் வைத்தியர்கள் கலந்து கொண்டுள்ளனர்.









