வடக்கு கிழக்கு தழுவிய தீச்சட்டிப் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளனர் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள்

0
528 views

தீச்சட்டி போராட்டத்தினை எதிர்வரும் 20ஆம் திகதி முன்னெடுக்கப் போவதாக வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் அழைப்பு விடுத்துள்ளனர்.

கிளிநொச்சியில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே இந்த விடயத்தினை தெரிவித்துள்ளனர். தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் கிளிநொச்சி மாவட்டத்தில் தொடர் கவன ஈர்ப்பு போராட்டத்தை ஆரம்பித்து 20ஆம் திகதி 4 ஆண்டுகள் நிறைவடையும் நிலையில் குறித்த தினத்தன்று தீச்சட்டி போராட்டமாக முன்னெடுக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது, குறித்த போராட்டத்தில் கலந்து கொள்ளுமாறு வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் அழைப்பு விடுத்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here