கடந்த 28ம் திகதி வல்வெட்டித்துறை பேரூந்து நிலையத்தில் கொரோனா தொற்றாளர்களுடன் தொடர்புபட்டு சுய தனிமைப்படுத்தலில் வைக்கப்பட்டவர்களுக்கு PCR பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் பருத்தித்துறை சுகாதார பிரிவிற்குட்பட்ட பருத்தித்துறை மற்றும் வல்வெட்டித்துறையைச் சேர்ந்த 48 பேருக்கே PCR பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
இதன்படி முடிவுகளில் வல்வெட்டித்துறையில் PCR பரிசோதனை எடுக்கப்பட்டவர்களில் எவருக்கும் கொரோனா இல்லை என முடிவு கிடைத்துள்ளது.








