யாழ்ப்பாணம் – ஆரியகுளம் பகுதியில் ஆண் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. குறித்த நபர் ஆரியகுளம் பகுதியைச் சேர்ந்த 65 வயதுடையவர் எனவும் கடந்த 2 நாட்களாக காணாமல் போயிருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் யாழ். பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.








