வல்வெட்டித்துறையில் நேற்றைய தினம் (30.10.2020) இரு குடும்பங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.
கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டிருந்த பொலிகண்டியைச் சேர்ந்த இளைஞனின் குடும்பத்தினர் பயணம் செய்த இ.போ.ச இன் பருத்தித்துறை – கீரிமலை பேரூந்தின் நடத்துனர் என்ற வகையில் வல்வெட்டித்துறை தெணியம்பையில் (சுந்தரி மருந்தகத்திற்கு அருகிலுள்ள ஒழுங்கை) ஒரு வீடும், வல்வெட்டித்துறை அமெரிக்கன் மிஷன் தமிழ்க்கலவன் பாடசாலைக்கு அருகிலுள்ள பெண் ஒருவர் வெளி மாவட்ட பல்கலைக்கழகத்திலிருந்து வீடு திரும்பியதன் காரணமாகவும் வல்வெட்டித்துறையில் இவ்விரு வீடுகளும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.








