வவுனியா நொச்சிமோட்டைப் பகுதியில் விபத்து… வல்வை சிதம்பராக்கல்லூரி அதிபர் காயம்

0
847 views

வவுனியா நொச்சிமோட்டைப் பகுதியில் நேற்று காலை இடம்பெற்ற வாகன விபத்து ஒன்றில் வல்வை சிதம்பராக்கல்லூரி அதிபர் காயமடைந்துள்ளார். வவுனியா நொச்சிமோட்டை பகுதியில் நேற்று (09.10) காலை ஏற்பட்ட விபத்தில் மூன்று வாகனங்களுக்கு சேதம் ஏற்பட்டுள்ளது.

இவ் விபத்து சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில் வவுனியாவில் இருந்து யாழ் நோக்கி சென்ற பிக்கப் எதிர் திசையில் வந்த காருடன் மோதியதாகவும் பின்னர் பாரஊர்தியிலும் மோதுண்டதாகவும் ஆரம்ப கட்ட விசாரணையில் இருந்து தெரிய வருவதாக பொலிசார் தெரிவித்தனர்.

இவ் விபத்தில் ஒருவருக்கு காயம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்த ஓமந்தை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். இவ்விபத்தில் வல்வை சிதம்பராக்கல்லூரியின் அதிபர் வே.பரமேஸ்வரன் அவர்கள் சிறுகாயங்களுக்கு உள்ளாகி வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here