கனடாவில் ஏற்பட்ட படகு விபத்தில் இலங்கையை சேர்ந்த ஒருவர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
ரொரன்ரோவில் Woodbine கடற்பகுதியில் நேற்று ஏற்பட்ட விபத்தில் ஒருவர் உயிரிழந்த நிலையில் 6 பேர் காயமடைந்துள்ளனர்.
வல்வெட்டித்துறை தீருவிலையைச் சேர்ந்த 46 வயதான இலங்கைகோண் பல்லவநம்பி என்பவர் உயிரிழந்துள்ளார்.
20 அடி bowrider படகு ஒன்றை 46 வயதான ஆண் ஒருவர் இயக்கிக் கொண்டிருந்தார். அப்போது அந்தப் படகில் ஆறு பயணிகள் இருந்தனர். படகை இயக்கியவர் கட்டுப்பாட்டை இழந்து, Woodbine கடற்கரைக்கு அருகே கரையிலிருந்து சுமார் 90 மீட்டர் தொலைவில் படகை பாறைகளில் மோதினார்.
படகு பாறைகளில் மோதியதன் விளைவாக, 47 வயதான ஒருவர் உயிருக்கு ஆபத்தான காயங்களுடன் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனாலும் அவர் சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்துள்ளார்.







