தற்போது நிலவும் அதிக வெப்பம் காரணமாக கண்கள் பாதிக்கக்கூடுமென கண்நோய் நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
எனவே வெளியிடங்களுக்கு செல்லும்போது கண்ணாடிகளை பயன்படுத்துமாறு மக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
வெப்பம் காரணமாக கண் பார்வைக்கான பகுதியில் சிக்கல் ஏற்படுமாயின் சிறிய எழுத்துக்களை பார்ப்பதில் பாதிப்பு ஏற்படுமென தேசிய கண் வைத்தியசாலையின் விசேட கண்நோய் நிபுணர் முதித்தா குலதுங்க தெரிவித்துள்ளார்.








